திருச்சி BHEட வங்கியில் 1.47 கோடி கொள்ளை - முகமூடி கொள்ளையனுக்கு வலைவீச்சு.

  கண்மணி   | Last Modified : 01 Nov, 2019 02:57 pm
1-47-crore-robbery-at-bhel-bank-of-trichy

திருச்சி திருவெறும்பூர் BHEட வளாகத்தில் BHEL C0 - opeartive Bank செயல்பட்டு வருகிறது.இவ்வங்கி காட்டூர், தெப்பகுளம், திருவெறும்பூர் டவுன்ஷிப் உள்ளிட்ட 4 இடங்களில் கிளைகள் உள்ளது 

BHEL வங்கியில் பொறியாளர்கள், மேலாளர்கள்,ஊழியர் மற்றும் காவலர்கள் என 8500 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.  24 கட்டிட கிளையில்  மேலாளர்- காசாளர் உட்பட 6 பேரும் மட்டும் பணி புரிந்து வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பார்த்த போது அலுமினிய கம்பிகளால் ஆன ஜன்னல்கள் கழட்டப்பட்டு உள்ளே இருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட 1.47 கோடி  பணம்  கழவாடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து மேலாளர் ரவிசந்திரன் கொடுத்த தகவலரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த BHEL காவல் நிலைய ஆய்வாளர் ஞான வேலன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கை ரேகை சேகரிக்கப்பட்டது மேர்ப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

இதனிடையே திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வங்கிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார் மேலும் விசாரனையில் திடுக்கிடும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன

மூகமூடி அணிந்து இரவு 7.53 மணிக்கு ஜன்னலை  கழட்டி உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த 147 கோடி யை எடுத்து கொண்டு 7.59 - க்கு வெளியேறியது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது.

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி, சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜுவல்லரி வழக்குகளில் ஈடுபட்ட முருகன், சுரேஷ், கணேஷன் உள்ளே சென்றது போல் இவனும் அதே மாதிரி கையாண்டு இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் சகாக்கள் அல்லது அவனது குழுவில் உள்ள நபர் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close