கோவை பாஜக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் யாத்திரையில் ஏரளமானோர் பங்கேற்றனர்.

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 04:45 pm
pilgrimage-on-behalf-of-coimbatore-bjp

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பாஜக சார்பில் மகாத்மா காந்தியின்  150வது  பிறந்த நாளை முன்னிட்டு  அக்டோபர் இரண்டாம் தேதி  தொடங்கிய  யாத்திரை  இன்று  நிறைவு பெறும் வகையிலும், சர்தார்  வல்லபாய் பட்டேல்  அவர்களின்  பிறந்த நாள்  மற்றும் மகாபலிபுரத்தில் இந்திய சீனர்  சந்திப்பின் பொழுது தமிழ் மொழிக்கும்  தமிழ் கலாச்சாரத்திற்கும்   பெருமை சேர்க்கின்ற வகையில் எடுத்து கூறிய பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக இந்த முப்பெரும் விழா யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்த யாத்திரையானது பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்  கோவை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்த யாத்திரை  கோவை காந்திபுரத்தில் தொடங்கி சித்தாப்புதூர் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சிவனந்தகாலனியில் முடிவடைந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close