கும்பகோணம் : 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  மற்றும் நிலவேம்பு கசாய பவுடரை வழங்கிய வங்கி! 

  கண்மணி   | Last Modified : 01 Nov, 2019 05:02 pm
kumbakonam-bank-gave-10-lakhs-worth-of-commodity

கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் கொசுவை ஒழிப்பதற்கும் பொதுமக்களுக்கு டெங்கு வராமல் தடுப்பதற்கும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  மற்றும் நிலவேம்பு கசாய பவுடர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் தமிழகத்தில் பெய்து வரும் தீவிர பருவ மழையின் காரணமாக  சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகிவருகிறது.  கொசுவை ஒழிப்பதற்கு தமிழக அரசு பல துறையில் இருந்து கொசுவை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 அதன் ஒரு கட்டமாக கும்பகோணம் நகராட்சியில் கொசுவை ஒழிப்பதற்கும் பொதுமக்களுக்கு டெங்கு வராமல் தடுப்பதற்கும் சிட்டி யூனியன் வங்கி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பில் நகராட்சிக்கு பல்ஸ் ஃபாகிங் மிஷின் 6, மினி பல்ஸ் ஃபாகிங் மிஷின் 6 மற்றும் கைத்தெளிப்பான் 15  நிலவேம்பு கசாய 1000 கிலோ பவுடரை நகராட்சி ஆணையர் ஜெகதீசனிடம் வங்கியின் தலைவர் மோகன் சிஎஸ்ஆர் பவுண்டேஷன் தலைவர் பாலசுப்பிரமணியன் முதன்மை திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் 10 லட்சத்துக்கான பொருட்களும் நிலவேம்பு கசாயம் பவுடரையும் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close