நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் தற்கொலை செய்து  கொண்ட  பெண் 

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 07:15 pm
woman-sucide-in-coimbatore

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பத்திர ஆபிஸ் பெண்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா (23). இவர் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

 கடந்த இரண்டு வருடமாக இவர் வீட்டில் சீசர் என்ற பெயரில் செல்லமாக நாய் வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தபோது, அவரது நாய் பயந்து சத்தமாக குறைத்துள்ளது. அருகிலுள்ளவர்கள் இந்த நாயை எங்காவது கொண்டு போய் விடுகள் என்று கவிதாவின் தந்தையிடம் கூறியுள்ளனர். இதனால் பெருமாள் நாயை காரணம் காட்டி தனது மகளை திட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். 

தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அப்பா, அம்மா, பாட்டி மற்றும் தனது தம்பியிடம் சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி எழுதியுள்ளார். மேலும் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். வார, வாரம் கோயிலுக்கு போக வேண்டும் என்றும், எல்லோரும் என்னை மன்னித்துவிடுகள் என்று எழுதி வைத்துவிட்டு அதன்பிறகு தற்கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்க்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close