சென்னை: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் பலி!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 09:38 am
bus-accident-in-chennai

சென்னை  பாடி மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் இருந்து கோயம்பேடு வந்த அரசு பேருந்து ஒன்று பாடி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துநர் வீரமுத்து என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக மீட்கபட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close