கும்பகோணம்: திமுக சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 10:52 am
kumbakonam-dmk-s-role-in-dengue-prevention

கும்பகோணத்தில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் பெய்து வரும் தீவிர பருவ மழையின் காரணமாக  சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகிவருகிறது. கும்பகோணத்தில் கொசுவை ஒழிப்பதற்கு திமுக கூட்டணி கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கொசுவை ஒழிப்பதற்கும் பொதுமக்களுக்கு டெங்கு வராமல் தடுப்பதற்கும், திமுக நகரம் சார்பில் நகரச் செயலாளர்  தமிழழகன் தலைமையில் மகாமக குளம் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,  சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் சலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கசாயம் வழங்கினர்.

மேலும், மகாமக குளம் அருகில் உள்ள ஜெகநாதன் பிள்ளையார் திருக்கோவில் அருகிலுள்ள பாதாள சாக்கடையில் நிர்வாகிகள் கொசுவை ஒழிப்பதற்காக கொசு மருந்து அடித்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close