திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 02:08 pm
gold-seized-in-tirchy-airport

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட  ரூ. 78.61 லட்சம் மதிப்புடைய தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த ஜெசிமா, பர்வீன் பானு, அசன் முகமது ஆகிய 3 பேர் உடமைகளில் சுமார் ரூ. 78.61 லட்சம் மதிப்புடைய 2 கிலோ 23 கிரா தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close