கோவையில் கனமழை: மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 08:59 am
heavyrain-in-coimbatore

கோவையில் நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close