திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கிராம மக்கள் போராட்டம்

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 10:05 am
thiruvalluvar-statue-insults-villagers-struggle

தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கண் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கருப்பு மையை பூசியுள்ளனர். மேலும், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணியை வீசியுள்ளனர். இன்று காலை சிலை அவமதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close