கோவை: உயிரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் இருவரின் உயிரைப் பறித்த துயரம்

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 01:30 pm
two-youngster-death-in-ambulance-collision

கோவை மாவட்டம் சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்த சதீஷ் குமார்(18) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருந்தனர். நேற்றி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு சுமார் 8 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். சூலூர் பேருந்து நிலையம் அருகே  அவர்கள் வந்துகொண்டிருந்த போது, வேகமாக வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையின் வலதுபக்கம் திரும்பி எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் இருந்து கடைக்குள் சென்று நின்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சதீஷ் மற்றும் விக்ரம் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பழனி மற்றும் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் ஆகியோர் காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உயிரிழந்த வாலிபர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close