கோவில் நிலங்களை ஆங்கிரமித்தவர்களுக்கே வழங்க எதிர்ப்பு: இந்து முன்னணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு!

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 03:56 pm
petitioned-to-the-district-collector

ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கும் அரசின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா கொடுக்கவும், தனியாருக்கு விற்பதற்கும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது பக்தர்களுக்கு வேதனை அளித்துள்ளதாக தெரிவித்தனர். எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close