வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது !

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 07:09 pm
six-arrested-for-trying-to-hunt-wildlife

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆனைகட்டி அருகே அதிகாலை நேரங்களில் துப்பாக்கியுடன் காட்டுக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், வனத்துறையினரின் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, ஆனைகட்டி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தூமனூரைச் சேர்ந்த எல்.சடயன் (53), ஆலமரமேடு பகுதியை சேர்ந்த கே.பொன்னுசாமி (75), சி.மருதன் (65), சி.முருகன் (37), கண்டிவழியை சேர்ந்த சி.ரங்கசாமி (57) மற்றும் ஜம்புகண்டியைச் சேர்ந்த கே.நஞ்சப்பன் (33) ஆகியோரை கைது செய்தனர்

மேலும், அவர்களிடமிருந்த 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவர்கள் 6 பேரையும் ஆனைகட்டி போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close