கோவை: குற்றவாளிக்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாக மாதர் சங்கத்தினர் புகார்

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 04:24 pm
coimbatore-complainant-of-the-mather-association

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு துணைபோகும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையை அடுத்த வேலப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாராள். இவரது மூத்த மகள் துளசிமணி(25). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த 28 ந்தேதி அதே ஊரைச்சேர்ந்த கணேசன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர்  கணேசனை தப்பிக்க வைக்கவும், வழக்கை திசை திருப்பும் நோக்கிலும், கணேசனை தாக்க முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாலியல் குற்றவாளி மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்ணின் தாய் மாராள், மாதர் சங்க மாவட்ட தலைவி ராதிகா தலைமையில் மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடத்தில் மனு அளித்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close