பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி!

  அனிதா   | Last Modified : 05 Nov, 2019 01:45 pm
student-suicide-attempt-to-not-pay-for-school-fees

கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி பள்ளி கட்டணம் கட்ட முடியாததால் மனமுடைந்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்த அகரமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் கிரிஜா வயது (14) இவர் வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கல்வி கட்டணம் ரூ.20,000 செலுத்தாததால் பள்ளிக்கூட தலைமையாசிரியர் கடந்த கடந்த இரு தினங்களாக பள்ளி வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் மாணவியை நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி மன உளச்சலுக்கும், பெலவீனத்திற்கும் ஆளாகியுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை தந்தையால் பணம் கட்டமுடியாது என்பதை அறிந்த கிரிஜா மீண்டும் பள்ளியில் நிற்க வேண்டும் என்ற பயத்திலும், தன்னால் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்ற மன உளச்சலிலும் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். கிரிஜா மயக்க நிலையில் இருப்பதை கண்ட அவரது தயார் அலறியடித்தப்படி கும்பகோணம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். அங்கு கிரிஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close