கோவை: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்- 100க்கும் மேற்பட்டோர் கைது

  அனிதா   | Last Modified : 05 Nov, 2019 03:46 pm
coimbatore-electricity-contract-workers-struggle

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையறை வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 1998க்கு முன்பு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 2008க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380வழங்க வேண்டும், 2008க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங்மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டன. மறியல் போட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்து அப்புறப்படுத்தினர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close