கும்பகோணம்: காவிரித் தாய் ரத யாத்திரை

  அனிதா   | Last Modified : 05 Nov, 2019 03:53 pm
kumbakonam-cauvery-thai-ratha-yatra

கும்பகோணம் திருவையாறு காவிரியாற்றில் அன்னை காவிரித் தாய்க்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் அகில பாரதிய துறவியா்கள் சங்கம், காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் காவிரி விழிப்புணா்வு ரத யாத்திரை கா்நாடக மாநிலம், குடகுமலை தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகாா் வரை நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டு அக்டோபா் 21ஆம் தேதி கா்நாடக மாநிலம், குடகுமலை தலைக்காவிரியில் ரதயாத்திரை தொடங்கியது. இந்த ரதயாத்திரை இன்று திருவையாறு வந்தடைந்தது. திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் அகில பாரதிய துறவியா் சங்கப் பொதுச் செயலா் ஆத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், பொள்ளாச்சி வேதாந்த ஆனந்தா சுவாமி, காவிரி ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளா் கோரக்கா் சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு அன்னை காவிரிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் செய்தனா்.

இதில் திருவையாறு பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காவிரி தாயை வழிபட்டனா். நிகழ்ச்சியில் வா்த்தக சங்கத் தலைவா் திலகா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் செந்தில்மணி,  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ரத யாத்திரை திருவையாறிலிருந்து புறப்பட்டு சுவாமிமலை, கும்பகோணம் வழியாகப் பூம்புகாருக்குச் செல்கிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close