திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 06:56 pm
gold-jewelery-worth-rs-30-22-lakh-seized-at-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.30.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்,  சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிந்தோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 2.16 லட்சம் மதிப்புள்ள 432 சிகரெட் பாக்கெட்டுகளும், ரூபாய் 9.55 லட்சம்  மதிப்புள்ள 258 கிராம் எடையுள்ள 19 ஜோடி  தங்க காதணிகளும்  பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோன்று கேரளாவைச் சேர்ந்த  மாமி அகமது குட்டி என்பவர் சூட்கேஸ் மேலுறையில் கம்பி வடிவில் மறைத்து எடுத்துவந்த 508 கிராம் எடையுள்ள 19.60 லட்சம் மதிப்பிலான தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் கடத்தல் பொருட்களின் மதிப்பு ரூ.31. 31 லட்சம் ஆகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close