திருச்சி விமானநிலையத்தில் 15 கிலோ தங்கம் பறிமுதல்

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 10:22 am
15kg-of-gold-seized-at-trichy-airport

விமானம் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 15 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்திவருவதாக கிடைத்த தகவலை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சார்ஜா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். நேற்றிரவு முதல் நடைபெற்ற சோதனையில் சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close