பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 10:39 am
closing-of-useless-deep-wells-is-to-pays-tribute-to-surjith

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

சென்னையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகையில் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், " சுர்ஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என்பதில் அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாக கூறினார். சுர்ஜித் மீட்பு பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close