உடலுக்குள் தங்கம் வைத்து கடத்தல்: 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை!

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 11:31 am
medical-examination-for-12-persons-who-hid-gold-in-body

வெளிநாடுகளில் இருந்து உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த 12 பேரை மருத்துவப் பரிசோதனைக்காக சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, திருச்சி விமானநிலையத்தில் நேற்றிரவு 11 மணி முதல் மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 100 பேரிடம் இருந்து 30 கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது இன்று மாலை வரை தொடரும் என கூறப்படுகிறது. இது தவிர உடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் 12 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close