செல்போன் கடையில் துளையிட்டு புதிய செல்போன்களை திருடி சென்ற கொள்ளையன் கைது!

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 12:15 pm
thief-arrested-for-stealing-cell-phones

கோவை சுந்தராபுரம் அருகே செல்போன் கடையில் துளையிட்டு புதிய செல்போன்களை திருடி தலைமறைவான வாலிபரை போத்தனூர் தனிப்படை போலீஸார் மதுரையில் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நாஷ்த். இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி சாலையில் செல்போன் கார்னர் என்ற பெயரில் செல்போன் விற்பனை கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2018 ஜூலை மாதம் இவரது கடையின் மேல்புறத்தில் துளையிட்டு உள்ளே இருந்த புதிய செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பி சென்றார். சம்பவம் தொடர்பாக போத்தனூர் குற்றபிரிவு  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் செல்போன் கடையில் துளையிட்டு திருடி சென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பால் தினகரன் என்ற நபரை தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 26 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். பொதுவாக பால் தினகரன் சிமெண்ட் சீட் கடைகளின் மேலேறி துளையிட்டு திருடும் வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது . கைது செய்யப்பட்ட பால்தினகரனை போலீசார் ஜே.எம்  7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close