ஸ்ரீரங்கம் கோயில் முறைகேடு: குற்றச்சாட்டு எழுப்பியவர் விடுவிப்பு!!!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 09:45 pm
the-slanderer-of-the-srirangam-temple-scam-has-been-released

அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் மீது ஸ்ரீரங்கம் போலீசார் 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி சோமசுந்தரம், ரங்கராஜன் நரசிம்மனை சொந்த ஜாமீனில் விட உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல்துறை விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில்  இருக்கும்போது அது குறித்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close