சென்னையில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு!

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 08:42 am
air-pollution-is-high-in-chennai

சென்னை மணலி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இன்று சென்னை மணலியில் பனிமூட்டத்துடன் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரக்குறியீடு 50 வரை மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் மணலியில் 320 வரை அதிகரித்துள்ளது. இதேபோல், வேளச்சேரியில் 292, ஆலந்தூரில் 285 ஆக காற்றின் தரக்குறியீடு உள்ளது. 

 Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close