ரூ.200க்கு பதில் ரூ.500ஆக வாரி வழங்கிய ஏடிஎம்: குஷியில் வாடிக்கையாளர்கள்

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 09:12 am
atm-provided-by-rs-500-instead-of-rs-200

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர். 

சேலம், ஓமலூர் பண்ணப்பட்டியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இருந்து ரூ.200க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர். தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் பணம் மாறி வந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும், பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்பு பொறுப்பு எனவும் வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close