ஆழ்துளை கிணற்றுக்குள்  தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 03:07 pm
a-new-device-to-save-children

ஆழ்துறை கிணற்றுக்குள்  தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள கோவை தொழில் அதிபர் அதற்கு சுர்ஜித் நினைவாக HOS - (HANDS OF SURJITH) என பெயரிட்டுள்ளார். 

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் டி.நவநீத். இவர் சுர்ஜித் உயிரிழப்பை தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற கை போன்ற வடிவமைப்பில் புதிய கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கோவை வடவள்ளி கல்வீரம் பாளையத்தில் உள்ள சௌடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. 

இந்த HOS கருவி 3 அடி அங்குலம் உள்ளதால் எந்த சிறு ஆழ்துளை கிணற்றுக்குள்ளும் எளிதில் சென்று குழந்தையை மீட்கும் திறன் பெற்றுள்ளது. இந்த கருவி சிறிய வடிவில் உள்ளதால் குழந்தையை மீட்கும் போது எந்தவிதமான மண்சரிவுவும் ஏற்படாது. மேலும், எளிய வடிவில் இருப்பதால் இந்த கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும்  எளிதில் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.

இந்த கருவியை விட நூறு மடங்கு செயல்திறன் கொண்ட ஓர் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் புதிய கருவி ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் நவநீத் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவாக்கப்படும் கருவியை ஆழ்த்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் தன்னார்வ குழுவிற்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆழ்குழாய் கிணறுகளில் நேரும் இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு சில எளிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூடி அதை வீடியோ எடுத்து 9486976099 எண்ணிற்கு பகிர்ந்தால் அவர்களுக்கு தக்க சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என நவநீத் கூறினார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close