மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை!

  அனிதா   | Last Modified : 10 Nov, 2019 03:57 pm
madurai-vehicles-blocked-at-simmakkal-stone-bridge

மதுரை வைகையாற்றில் அதிகளவு நீர் செல்வதால் சிம்மக்கல் அருகே உள்ள கல் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிகம் பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன. வைகை அணை நிரம்பியுள்ளதையடுத்து, அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மதுரை வைகை ஆற்றில் அதிகளவு நீர் கரைபுரண்டு செல்கிறது. இந்நிலையில், சிம்மக்கல் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல் பாலம் நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close