6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 10 Nov, 2019 07:07 pm
free-ac-service-training-course-anna-univ-announcement

தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம்  ஏ.சி., ஃபிரிட்ஜ் சர்வீஸ் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தென் சென்னை ரோட்டரி கிளஃப் ஆகியவை சார்பில் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம்  6 மாத ஏ.சி., ஃபிரிட்ஜ் சர்வீஸ் தொழில் கல்வி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெறும். இதில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவ.2019 முதல் ஏப்ரல் 2020 வரை நடக்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க நேர்முகத் தேர்வு அடிப்படையில் 60 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், CPDE கட்டிடம், அண்ணா பல்கலை என்ற முகவரியை அணுகுமாறு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close