தனியார் பேருந்துகள் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 24 பேர் படுகாயம்

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 02:47 pm
private-bus-collision-driver-died-48-injured

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி அடுத்த  ஆ.தாழையூர்  மேட்டு முனியப்பன் கோவில் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பாஸ்கரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சேலம் வழியாக கேரளா சென்ற தனியார் டிராவல்ஸ் மகுடஞ்சாவடி அருகே 11ஆம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு ஆ.தாழையூர்  மேட்டுமுனியப்பன் கோயில் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஈரோடு - சேலம் வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் டிராவல்ஸ் ஓட்டுநரான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி மகன்  பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்துத்தில் பயணம் செய்த 24 பேர் படுகாயமடைந்தனர். இதில் குழந்தைவேலு, ஆறுமுகம், அம்மாயி, மோகன், ராம்குமார் ,சண்முகம், சிவகுமார், சசிகுமார், லட்சுமணன், அண்ணாதுரை, சிந்துஜா, பாலம்மாள், தினேஷ் உள்ளிட்டோர் சீரகாபாடி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close