பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 10:14 am
security-vehicle-collision-one-more-person-dies

நெல்லையில் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்ததையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை கடையநல்லூர் அருகே போலீசார் சென்ற பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயிஷா பீவி என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close