கோவை: ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 10:33 am
coimbatore-forest-department-intensifies-capture-of-a-single-wild-elephant

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜா என்னும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரிபாளையம் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை  அப்பகுதி மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதோடு, 8 வயது சிறுமி உட்பட 3 பேர் இந்த யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அர்த்தனாரிபாளையம் பெருமாள் கோவில் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். யானையை பிடிப்பதற்காக பாரி, கலீம் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close