காற்று மாசை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 12:03 pm
no-need-for-people-afraid-to-be-air-pollution-minister-rb-udayakumar

சென்னையில் காற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ளை தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காற்று மாசு குறித்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 'காற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், சென்னையில் படிப்படியாக காற்றின் மாசு குறையும் எனவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதள தகவலை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், காற்றுமாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் தெரிவித்தார்.  கடல்காற்று முழுமையாக வராததாலும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் சென்னையில் காற்றுமாசு அதிகரித்துள்ளதாகவும், வாகனப்புகை, தொழிற்சாலைகளின் புகை காரணமாகவும் அதிகாலையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close