உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு: திருச்சியில் மாதிரி வாக்குப்பதிவு!

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 03:00 pm
local-election-preparation

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சியில், ஏற்கனவே கர்நாடகா மாநிலத்திலிருந்து 5,608 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 2,984 மின்னணு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரமும் வரவழைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துகட்சி பிரநிதிகள் முன்னிலையில் பெல்நிறுவன பணியாளர்களை கொண்டு கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று முதற்கட்ட சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், இன்றையதினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதிக்கப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு மாவட்ட  ஆட்சியர் சிவராசு முன்னிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு சரியானமுறையில் இயங்குகிறதா என்று சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி, 3 நகராட்சி, 16 பேரூராட்சிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ளது. நகர்புறத்தில் 10,24,201 வாக்காளர்களும், ஊரகப்பகுதிகளில் 12,21,017 வாக்காளர்களும் ஆக மொத்தம், 22,45,218 வாக்காளர்கள் வாக்களிக்க  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close