வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 10:37 am
water-opened-from-lake-valasakalpatti-farmers-rejoice

சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே  74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள வலசக்கல்பட்டி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவுகொண்டது, இந்த ஏரி 74  கிருஷ்ணாபுரம்,கெங்கவல்லி, வலசக்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு  நீர் பாசன வசதியாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கனமழையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வலசக்கல் பட்டி ஏரி நிரம்பி, உபரி நீர் சுவேத நதியில் கலந்து வீணாகி சென்றது,

இதனால் ஏரிப்பாசன விவசாயிகள் ஏரியின் கிழக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்து வந்தனர், கோரிக்கை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன் ஏரியின் கிழக்கு வாய்க்காலில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இன்று வலசக்கல் பட்டி ஏரியின் கிழக்கு கால்வாய் மதகில் இருந்து வினாடிக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். இதன் மூலம், வலசக்கல்பட்டி, ஆணையம்பட்டி, தெடாவூர், வீரகனூர்,வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள 750 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து போவதால் விவசாயிகளும், பொதுமக்களும், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close