வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு: கத்திக்குத்தில் இருவர் காயம்!

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 11:52 am
clash-for-whatsapp-status-two-injured

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும் இவரது நண்பரான சின்னவேடம்பட்டியை சேர்ந்த தனுஷ்குமார் என்பவருக்கும் இடையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு ஒரு கட்டத்தில் முற்றி விடவே தனுஷ்குமார் தன் நண்பர்கள் மோகன்ராஜ், கார்த்திக், அருண், அஜித் குமார், சதீஷ்குமார், சந்தோஷ் குமார் ஆகியோருடன் சென்று வீரபாண்டியை கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து, வீராபாண்டிக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்த பிரசாந்த், வசந்தகுமார், கோபால கிருஷ்ணன்  ஆகியோர் பதில்  தாக்குதலாக நடத்திய கத்தி குத்தில் தனுஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் தனுஷ்குமார், அருள், அஜத்குமார், சந்தோஷ்குமார், பிரசாந்த், வீரபாண்டி, வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய சதீஸ் மற்றும் கௌதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close