திருச்சி: எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 04:56 pm
corpse-recovery-in-burning

திருச்சி மாவட்டம் வனப்பகுதி அருகே காரில் எரிந்த நிலையில் சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி செல்லும் சாலையில் (வனத்துறை) இன்று அதிகாலை ஸ்கோடா கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காரினை சோதனையிட்டபோது, காரின் உள்ளே எரிந்த நிலையில் ஒருவர் இருப்பதை கண்டு, அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் சடலமாக மீட்கப்பட்டவர், திருச்சி மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொழில் போட்டியால் இவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என திருச்சி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close