'தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி '

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 10:33 pm
food-safety-training-for-street-food-vendors

தமிழகம் முழுவதும் தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்து மாவட்டம் தோறும் பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய தென்மண்டல இயக்குனர் முத்துமாறன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய தென்மண்டல இயக்குனர் முத்துமாறன் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அவர் மத்திய அரசு விரைவில் உணவு பாதுகாப்பு தொடர்பான முக்கிய வரைவு அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் இதன் பள்ளி வளாகங்களில் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்கள் மட்டுமே விற்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விவசாயிகள் முதல் தொழில் முனைவோர் விற்பனை செய்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்து முறையாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய தென் மண்டல இயக்குனர் முத்துமாறன் ‘பொது மக்களில் அதிகம் பேர் நடைபாதை உணவு கடைகளிலும் தெருவோர திறந்த வெளி உணவு கடைகளிலும் அதிக அளவு உணவு உட்கொள்வதை கருத்தில் கொண்டு மத்திய அரசு பொது மக்களுக்கான உணவு பாதுகாப்பு விதிமுறைகளை வைத்துள்ளதாகவும் இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தெருவோர மற்றும் நடைபாதை உணவு வியாபாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக முறையாக பயிற்சி அளித்து பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் மையம் ஏற்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட உணவு உட்கொள்வது உறுதி செய்யப்படும்’ என்றும் தெரிவித்தார்

மத்திய உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாநில அரசின் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து அனைத்து பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் வினியோகத்தில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close