திருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது

  அனிதா   | Last Modified : 14 Nov, 2019 09:16 am
four-culprits-arrested-in-trichy

திருச்சி மாவட்டம் வனப்பகுதி அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்து பெட்ரோல்  ஊற்றி காருடன் எரித்த சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி செல்லும் சாலையில் (வனத்துறை) நேற்று அதிகாலை ஸ்கோடா கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன் காருடன் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் சடலமாக மீட்கப்பட்டவர், திருச்சி மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 12ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சரவணனுக்கு சொந்தமான லாட்ஜிக்கு ஜாகீர் உசைனை வரவழைத்து கொலை செய்து சிறுகனூர் பகுதியில் பெட்ரோல் ஊற்றி காருடன் எரித்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மற்றும் இச்சம்பவத்திற்கு உடைந்தையாக இருந்த செட்டிகுளத்தை சேர்ந்த மணிகண்டன், சக்திவேல், விஜயகோபாலபுரத்தை சேர்ந்த மோகன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close