மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 08:42 am
mountain-rail-service-canceled-again

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வபோது நிலச்சரிவு ஏற்பட்டு மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிலச்சரிவால் ரயில் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறைகளை அகற்றி சீரமைத்து ரயில் சேவை தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் மண்சரிவால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஹில்கிரோ - ஆடர்லி ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட மண்சரிவால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close