கோவை: காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு - கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 12:43 pm
coimbatore-7-year-old-girl-dies-of-fever

கோவை மாவட்டத்தில் சங்கனூர் ஓடையில் இருந்து அதிக கொசுக்கள் உற்பத்தியாவதால் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ரத்தினபுரி சுப்ரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் தீபா தம்பதியினர். இவர்களது குழந்தை யோகா ஸ்ரீ (7). டாடாபாத் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தைக்கு கடந்த 13ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன் தினம் அதிகாலை குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தற்போது அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்,இப்பகுதியை சேர்ந்த பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள சங்கனூர் ஓடையில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், முறையான சுகாதார நடவடிக்கைகள்.இல்லை என்பதாலும் உயிர்பலி தொடர்வதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இப்பகுதியில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close