மதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 09:44 am
rs-7-62-lakh-worth-counterfeit-notes-seized-near-madurai-railway-station

மதுரை ரயில் நிலையம் நுழைவு வாயில் அருகே நின்ற லரியில் இருந்து ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரை ரயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வந்த லாரியில் ஒரு பை கிடந்துள்ளது. அதில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்ட ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பையில் இருந்த ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்  செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,  சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close