திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி திருநங்கை தீக்குளிக்க முயற்சி!

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 04:03 pm
graduate-transgender-suicide-attempt-in-trichy-collector-office

வேலைவாய்ப்பு கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பட்டதாரி திருநங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம்அரியமங்கலத்தை சேர்ந்தவர் அஜித்தா, பட்டதாரியான இவர் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வேண்டி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த திருநங்கை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்தபோது, திடீரென தன் பையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். 

கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம்பெண் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது இரண்டாவது வாரமாக இன்றைய தினம் திருநங்கை ஒருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close