இளம் பெண் மீது கார் மோதிய கோர விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 08:51 am
car-crash-on-young-girl-cctv-footage-released

திருப்பூரில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் மீது கார் மோதிய விபத்தின் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் மகேஸ்குமார். இவரது மனைவி நந்தினி (27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நந்தினி தனது வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் சாலையோரம் சென்று கொண்டிருந்த நந்தினி மீது மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து நந்தினி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நந்தினி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நந்தினியின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close