கும்பகோணம்: அரசு நிலத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு- கிராம மக்கள் போராட்டம்

  அனிதா   | Last Modified : 20 Nov, 2019 03:00 pm
kumbakonam-the-villagers-struggle

கும்பகோணம் அருகே சேங்கனூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சேங்கனூர் கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நெல்லை உலரவைக்கும் களம் அமைத்து அறுவடை நேரங்களில் இந்த களத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டாவுடன் தாரைவார்க்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சேங்கனூர் கிராம மக்கள் பெண்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு நிலத்தை தனியாருக்கு வழங்கும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் அரசை கண்டித்து முழக்கமிட்டனர். அரசு நிலத்தை தனியாருக்கு பட்டாவுடன் வழங்கும் முடிவை கைவிடாவிட்டால் அடுத்த  கட்டமாக சாலை மறியல் மற்றும் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close