ஜென்ம அஷ்டமி பெருவிழா: நெய் தீபம் ஏற்றி காலபைரவர் வழிபாடு

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 09:30 pm
jenma-ashtami-festival-kovai

கோவையில் பழமை வாய்ந்த அலங்கார மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஜென்ம அஷ்டமி பெருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.

கார்த்திகை மாத தேய்பிறையில் கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில் காலனியில் அமைந்துள்ள அலங்கார மாரியம்மன் திருக்கோவிலில் ஒரே கல்லில் ஆன மகா துர்க்கையும் காலபைரவரும் எழுந்தருளியுள்ளனர்.

இங்கு கடந்த இரண்டு நாட்களாக ஜென்மாஷ்டமி பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 18 யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து கால பைரவருக்கு அலங்கார தரிசனங்கள் செய்து அர்ச்சனை பூஜைகள் நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.

இது குறித்து கோவில் தலைமை அர்ச்சகர் சிவஜோதி கார்த்திகேயன் கூறுகையில், இந்த சிறப்பு வாய்ந்த காலபைரவரை வணங்கினால் மிகவும் நல்ல பலன்களை வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம் என தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிவமுத்து பிரகாஷ்,செங்குட்டுவன், மாரித்துரை,அழகுராஜா,விஜயன் ஆகியோர் செய்திருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close