பிரசவத்தின் போது வயிற்றில் ஊசி வைத்து தைத்த ஆரம்ப சுகாதார நிலையம்: உறவினர்கள் போராட்டம்

  அனிதா   | Last Modified : 21 Nov, 2019 12:15 pm
initial-health-center-with-injection-attached-in-the-stomach-during-delivery

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த பெண்ணுக்கு வயிற்றில் ஊசி வைத்து தைத்ததாக கூறி உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் ரம்யாவின் வயிற்றில் மருத்துவர்கள் ஊசி வைத்து தைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களை கண்டித்து மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வயிற்றில் ஊசி வைத்து தைத்ததாக கூறப்படும் ரம்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். வயிற்றில் சிக்கிய ஊசியை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close