தேசிய அளவிலான ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு

  அனிதா   | Last Modified : 21 Nov, 2019 02:47 pm
minister-s-congratulations-to-the-students-who-won-the-championship

தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பள்ளி மாணவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இயங்கி வருகிறது.  இப்பள்ளியின் 17 வயது உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவினர் வாரணாசியில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் குடகு பாரதிய வித்யா பவன் பள்ளியுடன் மோதிய  சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி 3 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த விருதை மாணவிகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியின் வர்ஷினி என்ற மாணவி சிறந்த முன் ஆட்ட வீராங்கனை என்ற பட்டத்தையும், தனுசியா என்ற மாணவி சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றனர்.  இப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தென் மண்டலம் ஒன்றில் முதலிடம் பிடித்து தேசிய அளவிலான போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றது. இதில் ஸ்ரீராம் என்ற மாணவர் சிறந்த முன் ஆட்ட வீரர் என்ற பட்டத்தை பெற்றார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டினார். மேலும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பள்ளியின் செயலாளர் கவிஞர் கவிதாசன் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close