கோவை: 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

  அனிதா   | Last Modified : 21 Nov, 2019 04:21 pm
coimbatore-wonderful-lamb-born-with-6-legs

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய  ஆண் ஆட்டுக்குட்டியினை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். 

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜல்லி மேட்டு புதூர் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் தேவையாம் பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவர்களிடம் 120க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது ஒரு ஆடு ஆறு கால்களுடன் கூடிய  ஆண் குட்டியை ஈன்றுள்ளது. இந்த ஆட்டுக்குட்டிக்கு வயிற்றின் அருகே புதிதாக இரண்டு கால்கள் முளைத்துள்ளன. இந்த ஆடு ஆறு கால்களுடன் நடந்து வருகிறது. ஆட்டுக்குட்டியை நேரில் வந்து ஆய்வு செய்த கால்நடை மருத்துவர் ஆட்டின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜயன் கூறும்போது, பல வருடங்ளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன். ஆனால் 6 கால்களுடன் கூடிய ஆட்டுகுட்டையை தற்போது தான் பார்க்கிறேன். இந்த ஆடு நல்லமுறையில் உள்ளது. இது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது என்று கூறினார். ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக் குட்டி குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close