மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய தாளாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 03:25 pm
the-case-filed-under-the-pocso-act-against-the-correspondent

கோவையில் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளரை போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர் 

கோவை மாவட்டம் காந்திபுரம் ஐந்தாவது வீதி பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளி தாளாளர் மரிய அண்டனி என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பெண் ஆய்வாளர்கள் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியது  உண்மை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close