டிக்டாக் வீடியோ எடுக்க காளை மாட்டுடன் குட்டையில் இறங்கிய இளைஞர் பலி..

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 04:26 pm
tik-tok-video-youth-died-drowns-in-pond

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே காளை மாட்டுடன் குட்டையில் இறங்கி டிக்டாக் செய்த இளைஞர், ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 

கோவை மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோர் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது நண்பரான விக்னேஸ்வரன் அவர் வளர்த்து வரும் காளை மாடுகளை வைத்து டிக் டாக் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் நால்வரும் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர். டிக் டாக் மோகத்தில் குட்டையில் மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் “டிக் டாக்” வீடியோ எடுத்து விளையாடியுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க ஆசை ஏற்பட்டு, வியாழக்கிழமை மீண்டும் அந்தக் குட்டைக்குச் சென்றுள்ளனர். முந்தைய நாளைப் போன்றே மாட்டின் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடிய படி டிக் டாக் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மிரண்டு போய் இங்கும் அங்கும் ஓடிய காளை மாடு, ஒரு கட்டத்தில் ஆழமான பகுதிக்கு விக்னேஸ்வரனை இழுத்துச் சென்றுள்ளது. நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை மற்ற மூவரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விக்னேஸ்வரன் உடலை மீட்டனர். இது போன்று அவ்வபோது செல்போன் மோகத்தால் விபரீத சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டிக்டாக் மோகத்தில் இளைஞர்கள் அபாயத்தை நோக்கி பயணிப்பது பெரும் வேதனைக்குரியதாகவே உள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close