குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 10:06 am
courtallam-main-falls

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்றைய தினம் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2வது நாளாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close